Posts

மாணவர்களின் தனித்திறனை எவ்வாறு கண்டறிவது? எவ்வாறு வளர்ப்பது?

Image
 ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒரு தனித்திறன் மறைந்திருக்கிறது. அந்தத் திறனைக் கண்டறிந்து, அதனைச் சரியான முறையில் வளர்ப்பதே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியமான பொறுப்பாகும். ஒரு மாணவர் எந்தச் செயல்பாட்டில் தன்னை மறந்து, முழுக் கவனத்துடனும் இயல்பான ஆர்வத்துடனும் ஈடுபடுகிறாரோ, அந்தச் செயல்பாடு அவருடைய இயல்பான ஆர்வத்திற்கான ஓர் அடையாளமாக இருக்கலாம். அத்தகைய ஆர்வத்தை அடையாளம் கண்டு, அந்தத் துறையில் தொடர்ந்து கற்கவும், ஆழமாகச் சிந்திக்கவும், முறையான பயிற்சி பெறவும் வாய்ப்பளிக்க வேண்டும். உதாரணமாக, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடும், கிரிக்கெட் விளையாட்டின் மீது சச்சின் டெண்டுல்கர் கொண்டிருந்த ஈடுபாடும் அவரவர் துறைகளில் தொடர்ந்து கற்கவும் பயிற்சி பெறவும் உந்துதலாக அமைந்தன. ஆர்வத்துடன் கூடிய கடின உழைப்பு, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஆழமான கற்றல் ஆகியவை அவர்களின் திறமையை வளர்த்தெடுக்க உதவின. இதேபோல், ஒரு மாணவர் அறிவியல், கணிதம், மொழி, கலை, விளையாட்டு, சமூக அறிவியல் அல்லது வேறு எந்தத் துறையில் ஆர்வம் கொண்டிருந்தாலும், அந்த ஆர்வத...

குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதில் காட்டும் அக்கறையை, அவர்களின் சிறிய நல்ல செயல்களைப் பாராட்டுவதிலும் காட்டுகிறோமா? குழந்தைகளின் வளர்ச்சியில் கண்டிப்பைவிட நம்பிக்கையும் ஊக்கமும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்?

Image
 மாண்பைக் கொண்டாடுங்கள்; மாண்பான சொற்களைப் பயன்படுத்துங்கள்! குழந்தைகள் அடம்பிடிக்கும்போதும், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கும்போதும், அவர்கள் நன்றாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களைக் கண்டிக்கிறோம். ஆனால், அவர்கள் செய்யும் சிறிய நல்ல செயல்களைக்கூட நாம் கொண்டாடுகிறோமா? பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் சிறு சிறு நல்ல செயல்களையும் பாராட்ட வேண்டும். அவர்களின் திறமைகள் மீதும் முயற்சிகள் மீதும் நம்பிக்கை வைத்து, அன்பான சொற்களால் ஊக்கப்படுத்த வேண்டும். நாம் அவர்களிடம் நம்பிக்கையுடன் பேசும்போதும், நம்பிக்கையோடு செயல்பட வாய்ப்பளிக்கும்போதும், அவர்களுக்குள் நல்ல மாற்றங்களும் புதிய உற்சாகமும் உருவாகின்றன. மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடாது. நம்முடைய அன்பும் நம்பிக்கையும் ஊக்கமும் குழந்தைகளைப் படிப்படியாக மாற்றும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதுபோல, எப்போதும் குழந்தைகளின் குறைகளையே சுட்டிக்காட்டினால், அவர்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்லக்கூடும். ஆனால், அவர்களின் முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் வெற்றிகளையும் கொண்டாடும்போது, அவர்கள்...